Friday, September 21, 2018

பயிற்சி 3.14.-3.15.

சடுதியில் மரபுகவி: குருநாதன் ரமணி

திருக்குறள் செய்தித் திரட்டு 001.

பயிற்சி 3.14. தேவர் குறளும்... 
ஔவையின் நல்வழிப் பாடல் குறிப்பு அறிதல்
திருக்குறளைத் துதிசெய்யும் ஔவையின் கீழுள்ள நல்வழிப் பாடலை நோக்குக. தேவர் குறளுந் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழு முனிமொழியும் - கோவை திருவா சகமுந் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர். ... 40 இப்பாடலில் திருக்குறள் தவிர, .. ஆறு நூல்களைக் குறிக்கிறார், ஔவை. .. அந்நூல்களின் பெயர்களை, .. அவற்றைக் குறிக்கும் செய்யுள் பதத்துடன் .. கண்டறிந்து எழுதுவோம்.
தேவர் குறளும் => திருக்குறள்
திருநான் மறைமுடிவும் => திருநான்மறை முடிவும் => உபநிடதங்கள்
மூவர் தமிழும் => அப்பர், சம்பந்தர், சுந்தரர் தேவாரப் பதிகங்கள்
முனிமொழியும் => வியாச முனிவர் பிரம்மசூத்திரம்
கோவை => மாணிக்கவாசகரின் திருச்சிற்றம்பலக் கோவை என்னும் திருக்கோவையார்
திருவாசகமும் => மாணிக்கவாசகரின் திருவாசகம்
திருமூலர் சொல் => திருமந்திரம்
பயிற்சி 3.15. திருக்குறள் பழைய உரையாசிரியர்கள்
வாய்பாட்டு வெண்பா அறிதல்
பண்டை நாளில் திருக்குறளுக்கு உரைசெய்தோர் பதின்மர்: .. தருமர், மணக்குடவர், நச்சர், தாமத்தர், .. பரிதி, திருமலையர், பரிமேலழகர், .. பரிப்பெருமாள், மல்லர், கலிங்கர். இவர்கள் பெயரைத் தொகுத்துச் சொல்லும் .. வாய்பாட்டு வெண்பா ஒன்றுளது. .. அதைக் கண்டறிந்து எழுதுவோம்.
தருமர் மணக்குடவர் தாமத்தர் தச்சர்
பரிதி பரிமே லழகர் - திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர்நூற்
கெல்லையுரை செய்தார் இவர்.

No comments:

Post a Comment